தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலை… கோவையில் மென்பொறியாளர் உயிரிழப்பு.!
ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக கடனில் சிக்கி கோவையை சேர்ந்த சங்கர் என்கிற மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் விளையாட வேண்டாம் எனவும், அதற்கு அடிமையாக வேண்டாம் என அரசு அறிவுறுத்தினாலும் ஆன்லைன் சூதாட்டத்தால் நடக்கும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் பெரும்பாலும் படித்த இளைஞர்கள் உயிரை மாய்த்துகொள்வது இன்னும் வேதனை அளிக்கிறது.
கோவை, உப்பிலிபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சங்கர், 29வயதான இவர் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஆன்லைன் சூதாட்டம் அடிக்கடி விளையாடி அதில் அடிமையாகி உள்ளார்.
இதில், நண்பர்களிடம் கடன் வாங்கி அதிலும் அதிக பணத்தை தோற்றுள்ளார். இதனால், மன விரக்தியடைந்து, கடந்த 12ஆம் தேதி வெளியூர் செல்வதாக கூறி, கோவை சாஸ்திரி நகரில் விடுதியில் தங்கியுள்ளார்.
அதன் பின்னர் அங்கு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து, காட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை மாய்த்து கொண்ட சங்கர் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.