தங்கம் விலையை போல தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்வை சந்தித்து வருகிறது. தக்காளி விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தக்காளி விளைச்சல் குறைவாக இருப்பதால் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், முதலில் தக்காளி விலை ரூ.60-ஆக இருந்த நிலையில,தற்போது கிலோ ரூ.200 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தக்காளி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு நியாயவிலை கடைகளின் மூலம் தக்காளி விற்பனை செய்து வருகிறது. அதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ தக்காளி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மாலை தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். ஏற்கனவே கூட்டுறவுத்துறை மூலம் 302 நியாயவிலை அக்கடைகளில தக்காளி விற்பனை நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…