தொடர்ந்து அதிகரிக்கும் தக்காளி விலை – அமைச்சர் ஆலோசனை

Minister Periya Karuppan

தங்கம் விலையை போல தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்வை சந்தித்து வருகிறது. தக்காளி விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தக்காளி விளைச்சல் குறைவாக இருப்பதால் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், முதலில் தக்காளி விலை ரூ.60-ஆக இருந்த  நிலையில,தற்போது கிலோ ரூ.200 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், தக்காளி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு நியாயவிலை கடைகளின் மூலம் தக்காளி  விற்பனை செய்து வருகிறது. அதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ தக்காளி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மாலை தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். ஏற்கனவே கூட்டுறவுத்துறை மூலம் 302 நியாயவிலை அக்கடைகளில தக்காளி விற்பனை நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்