தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதுடன், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதி மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 5 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களிலும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்ததால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. எனவே திருவாரூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, வேலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…