டிடிவி தினகரனுக்கு தொடரும் சறுக்கல் ! அடுத்ததாக பறிபோகும் ஜெயா தொலைக்காட்சி!
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அரசியலில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து சூழ்நிலையில், அவருக்கு ஆதரவாக இருக்கும் ஜெயா தொலைக்காட்சியும் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சசிகலா சிறைக்கு சென்ற பின் டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சி தொடங்கி நடத்தி வந்தார். இதனால், அவருக்கு ஆதரவாக இருந்து வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியும் பறிபோனது.இந்நிலையில், கடந்த ஆண்டு இரட்டை இலை அதிமுக விற்கே என்று வெளியான தீர்ப்பிலிருந்து அமமுக கட்சிக்கு தொடர்ந்து சறுக்கல் ஏற்படத் தொடங்கியது. உடன் இருந்த ஒவ்வொருவரும் களையத் தொடங்கினர்.முதலில்,செந்தில் பாலாஜி விலகி திமுக வில் இணைந்து பின்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
பின்னர், நடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், அமமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் பலரும் அந்த கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டனர். தற்போது, தங்க.தமிழ்ச்செல்வன் விலகி திமுகவில் இன்று இணைந்தார்.
இப்படி தொடர்ந்து பின்னிடைவு அடையும் டிடிவி க்கு ஜெயா தொலைக்காட்சியும் அவருக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட முடியாத நிலை உருவாகி இருப்பதாக ஜெயா நிறுவன CEO விவேக் தெரிவித்துள்ளார். மேலும், இனி ஜெயா தொலைக்காட்சியானது நடுநிலையோடு இருக்கும் என்றும் டிடிவி க்கு ஆதரவான செய்திகள் வெளியிடப்படாது என்று முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.