சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவி வரும் சமயத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.தினந்தோறும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உள்ளது .கோயம்பேடு சந்தையை மையமாக வைத்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது .
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6009 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மட்டும் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .சென்னையை பொறுத்தவரை 399 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் சென்னையில் 3043 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மண்டலமான் கோடம்பாக்கம் கருஞ்சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்து வந்தது. கோடம்பாக்கத்தில் 546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் கொரோனா பாதிப்பில் சென்னை மண்டலத்தை பொருத்தவரை முதலிடத்தில் உள்ளது. திரு.வி.க.நகரில் 477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராயபுரத்தில் 490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…