தொடர் விடுமுறை – களைகட்டியது குற்றாலம் அருவி.!
கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பலரது இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதனிடையே தென்காசி மாவட்டத்தில் அதிக மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தற்பொழுது, ஐந்து தினங்களுக்கு பிறகு குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்களுக்கு குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ளும் மத்திய நிதியமைச்சர்..!
அது மட்டும் இல்லாமல், நேற்றுடன் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் அதிகாலை முதலே அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால், குற்றாலம் அருவி களைகட்டி காணப்படுகிறது.