தொடர் இழுபறி… ராஜ்யசபா சீட் கேட்டு உறுதியாக நிற்கும் தேமுதிக? மறுக்கும் அதிமுக…

dmdk and admk

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஒருபக்கம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு என பேச்சுவார்த்தையில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Read More – நேற்று தமாக.. இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்..! அதிருப்தியில் அதிமுக..!

தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதன் வலுவான கூட்டணி கட்சிகளுடன் மக்களவை தேர்தலை சந்திக்கிறது. ஆனால், அதிமுகவின் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை, பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட்ட நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக என மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவுடன் கைகோர்த்தால், மேலும் சில கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.

Read More – தமிழகத்தில் ரூ.10,417 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்..!

ஆனால், தேர்தல் தேதி அறிவித்ததும் கூட்டணியை அறிவிப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதனிடையே, தேமுதிக மற்றும் பாமாவுடன் அதிமுக தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. அந்தவகையில், தற்போது, அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீட்டித்து வருவதாக கூறப்படுகிறது.

மாநிலங்களவை எம்பி சீட் வேண்டும் என்று கேட்டு தேமுதிக உறுதியாக இருப்பதாகவும், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்க முடியாது என்று அதிமுக தரப்பில் திட்டவட்டமாக கூறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

Read More – பிரதமர் மோடி வருகை… காங்கிரஸ் கறுப்புக்கொடி போராட்டம்.!

மேலும், ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு பதிலாக கூடுதலாக ஒரு மக்களவை தொகுதி தேமுகவுக்கு வழங்க அதிமுக முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், தேமுதிக வழங்கிய விருப்ப பட்டியலில் மதுரையை வழங்குவது கடினம் என அதிமுக கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று மறுபக்கம், பாமகவும் அதிமுகவிடம் ராஜ்யசபா உறுப்பினர் பதவி கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தற்போது ஓபிஎஸ் உட்பட 4 எம்எல்ஏக்கள் தவிர்த்து அதிமுக எம்எல்ஏக்கள் பலம் 62-ஆக மட்டுமே உள்ளது. இந்த சூழலில் பாமக அதிமுகவில் இணைந்தால் கூட, அதன் பலம் 67ஆக இருக்கும். இதனால் அதிமுகவால் 1 ராஜ்யசபா உறுப்பினர் பதவியை மட்டுமே பெற முடியும் என்ற சூழல் உள்ளது. ஆனால், மாநிலங்களவை பதவி வழங்க வேண்டும் என இரு கட்சிகளும் அதிமுகவிடம் எதிர்பார்த்து இருப்பதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
meena (10) (1)
Red Alert - Heavy Rains
Tamilnadu Speaker Appavu
parliament winter session 2024
Allu Arjun in chennai
Tamilnadu CM MK Stalin - PMK Leader Dr Ramadoss