#BREAKING: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – ஐகோர்ட் கிளை உத்தரவு

Default Image

மாஜிஸ்திரேட் முன் கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி உயர்நீதிமன்ற கிளையில் வாக்குமூலம் அளித்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி இன்று இரண்டாவது முறையாக உயர் நீதிமன்றம் மதுரை கிளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சிசிடிவி காட்சியில் கோகுல்ராஜியுடன் இருப்பது நான் அல்ல என்று ஏற்கனவே சுவாதி சாட்சியம் அளித்திருந்தார்.

வாக்குமூலம் பொய் எஎன்றாலும், இதே நிலை நீடித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் தவறான தகவலை அளித்ததாக சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அளித்த வாக்குமூலத்தில் எந்த மாற்றமும் இல்லை என சுவாதி பதிலளித்துள்ளார். நீதிபதிகள் மீண்டும், மீண்டும் கேட்டபோதும், வீடியோவில் உள்ள அந்த பெண் யார் என்று தன்னுடைய புகைப்படத்தை பார்த்தே தனக்கு தெரியாது என கூறியுள்ளார். நீதிபதிகள் ஏற்கனவே சுவாதிக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்