ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு..!
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு உள்ளதாக விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.
பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிசை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆருத்ரா மோசடி வழக்கில் ஏற்கனேவே 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த மாதம் 29-ஆம் தேதி, ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மைக்கேல் ராஜ் என்பவர் துபாயில் இருந்து வந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு உள்ளதாக பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக 2 மாதமாக வெளிநாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏற்கனவே இந்த வழக்கில் கைதான நடிகர் ரூசோ அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.