மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
வருகின்ற 31-ம் தேதியுடன் 4-வது கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நாளை மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் மோடி 4-ம் கட்ட ஊரடங்கு பிறப்பித்தபோது இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என அறிவித்தார்.
இதைதொடர்ந்து 4-ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் முன்பை விட தளர்வுகள் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொறுத்தவரை சலூன் கடைகள் திறக்க அனுமதி, ஆட்டோக்கள் இயங்க அனுமதி, இன்று முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்திய பின்னர் தான் தமிழகத்தில் 5-ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா..? அல்லது மீண்டும் தளர்வுகள் கொடுக்கப்படுமா..? என்பது தெரியவரும்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…