#Breaking:+2 பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் ஆலோசனை..!
சென்னை தலைமை செயலக கூட்டரங்கில் +2 பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 12 வகுப்பு தேர்வு மதிப்பெண்களை வைத்து தான் மாணவர்களின் எதிர்கால நிர்ணயிக்கப்படும் என்பதால் அரசு தேர்வை ரத்து செய்யுமா..? அல்லது மீண்டும் ஒத்திவைக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் கருத்துக்கேட்பு நடத்த அரசு திட்டமிட்டது.
அதன்படி, இன்றும் நாளையும் கருத்து கேட்டு நடத்தப்படுகிறது.அதன்படி, தமிழகத்தில் +2 தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பில் கல்வியாளர்கள் பெற்றோர்கள் 60 % பேர் தேர்வை நடத்த வேண்டும் என தெரிவித்ததாக பள்ளி கல்விதுறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,சென்னை தலைமை செயலக கூட்டரங்கில் +2 பொதுத்தேர்வு குறித்து,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டம் நிறைவடைந்ததும் தேர்வு குறித்த அறிக்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.