ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்..!
துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக இன்று காலை 10 மணி முதல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சொத்து வரி உயர்வு, முதல்வரின் வெளிநாட்டு பயணம், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில் தற்போதும் எதிர்க்கட்சித் தலைவர் அறையில் வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.