முதலமைச்சர் பழனிசாமியுடன் மத்திய சுகாதார குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக, தமிழகம் உள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு, தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழுவை 3-வது முறையாக அனுப்பியது.
சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் மத்திய குழு தமிழகம் வந்தது. இக்குழுவில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு உள்ளிட்ட 7 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த மத்திய ஆய்வு குழு தலைவர் ஆர்த்தி அகுஜா, மிண்ணு மருத்துவ ஆவண இயக்குனர் டாக்டர் ரவீந்திரா ஆகியோர் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய நிலையில் மத்தியக் குழுவினர் முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர், சுகாதார துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…