அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை ஆலோசனை – தமிழக தேர்தல் அதிகாரி
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்திருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றது.
அந்தவகையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை நாளை சந்தித்து, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாளை நண்பகல் 12.30 மணிக்கு தேர்தல் வழிமுறைகள் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை ஆலோசனை நடத்தவுள்ளார்.