இன்று மாலை அரசியல் கட்சிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை ..!
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சத்யபிரத சாகு இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வருகின்ற தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என்ற 5 முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இன்னும் 10 நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கிடையில், சென்னை தலைமைச்செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகரிப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.