துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே நேற்று அதிமுக செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. ஆனால் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.கூட்டம் நிறைவடைந்த பின் ,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறுகையில் ,அக்டோபர் 7-ஆம் தேதி அதிமுகவின் முதமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.எனவே முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தற்போது நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என தெரிவித்த நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…