1 முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தப்படும்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், 1 முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், 1 முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தப்படும், வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிகள் திறக்கப்படும் என்றும், நீட் தேர்வு ரத்து செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். அனைவரும் ஒன்று சேர்ந்து நீட்தேர்வை எதிர்க்க வேண்டும் என்பதே நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு…
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் தற்போது விறு விறுப்பாக சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…
கோவா : கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போ?..திருமணம் எப்போ? என அவருடைய ரசிகர்கள் உட்பட பலரும் கேள்விகளை எழுப்பிய நிலையில், அந்த…
கேரளா : வைக்கம் நூற்றாண்டு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஒன்றாக கலந்து…
வெஸ்ட் : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20…