பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு அட்டவணை; அமைச்சர் பொன்முடி இன்று வெளியிடுகிறார்.!
பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான தேதியை இன்று காலை அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார்.
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மே 5 இல் தொடங்கி ஜூன் 4 வரை ஏற்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு தேதி குறித்து இன்று அட்டவணை வெளியிடப்படுகிறது.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு எப்போது தொடங்கும், அனைத்து பிரிவு மாணவர்களுக்குமான கலந்தாய்வு தேதி குறித்த அட்டவணையை இன்று காலை 11 மணிக்கு வெளியிடுகிறார்.