கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

கள்ளக்குறிச்சியில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர்,அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக மதுரை, திண்டுக்கல், நெல்லை,சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025