பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது!
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது.
தமிழகம் முழுவதிலும் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது. அதிலும் முதல் கட்டமாக சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நடந்துள்ளது. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கடந்த 28 ஆம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வெளியிட்டிருந்தார். ஒரு 1,12,406 பேர் அடங்கிய இந்த தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவிகளை காட்டிலும் மாணவர்கள் அதிகமான இடத்தை பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் இந்த பட்டியலில் 15 பேர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகள், சிறப்புப் பிரிவினருக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரையிலும் இந்த கலந்தாய்வு நடக்கும் என கூறப்பட்டுள்ளது. விளையாட்டு பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் என பல்வேறு பொது பிரிவுகளுக்கான கலந்தாய்வு எட்டாம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 1,63,154 இடங்களுக்கான பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை இந்த நடப்பு கல்வி ஆண்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கலந்தாய்வு துவங்குவதற்கு முன்பாகவே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களும் ஏற்பட்டுள்ளது.