அங்கன்வாடிகளை திறக்க ஆலோசிக்க வேண்டும்..! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை…!

Default Image

கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல் பூர்வமாக ஆலோசனைகளை மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுவாக பள்ளிகளில் இயங்கிய காலகட்டங்களில் ஏழை, எளிய மாணவர்கள் உணவை குறித்து கவலைப்படுவதில்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் தங்களது வயிற்றுப் பசியை ஆற்றிக் கொள்வதற்காக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் சத்துணவு அளிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான சத்துணவு அளிக்கும் நடைமுறையும் செயல்படுத்த இயலாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் என்ற அமைப்பின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் பள்ளிகள் இயங்கும் போது தரப்படும் சத்துணவை தற்போதைக்கு சமைக்கப்பட்ட உணவாக வழங்குமாறு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால் சத்துணவு திட்டம் மூலம் பயன் பெற்று வந்த மாணவர்கள் தற்போது சாப்பாடு இன்றி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், சிலர் சாப்பாட்டிற்காக பிறரிடம் பிச்சை கேட்கும் அவல நிலைக்கும் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த பிரச்சினைகளை போக்க அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறந்து அவற்றின் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு சமைக்கப்பட்ட உணவாக அரசு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மனுதாரர் இந்த யோசனை குறித்து அரசின் கருத்தை அறிந்து அதன் பின் இது தொடர்பாக கருத்து தெரிவிப்பதாக தெரிவித்தார்.

மேலும் நீதிபதிகள் கொரோனா தாக்கம் தணிந்துள்ளதாலும், மூன்றாவது அலை தாக்கும் என்பது அறிவியல் பூர்வமாக என்ற கணிப்பும் இல்லாததாலும், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல் பூர்வமாக ஆலோசனைகளை மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

மேலும் அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்து, ஆலோசிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மாணவர்களுக்கு சத்துணவு சென்றடைவதற்கு மாற்று திட்டத்தை வகுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த விசாரணையை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்