அரசியல்

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்க முடிவு..!

Published by
லீனா

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் சிகிச்சை பெரும் தொழிலார்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.12,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்க தமிழக அரசு முடிவு.

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு ₹12,000 வீதம் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 60 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய், ஆஸ்துமா (Moderate and Severe Persistant), சிலிக்கோசிஸ் மற்றும் பக்கவாதம் ஆகிய தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு. தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்நிதியுதவியானது 6 மாதங்களுக்கு ஒரு முறை விடுவிக்கப்படும்.

இதற்கென ஆண்டுக்கு 60 இலட்சம் ரூபாய் வீதம் மூன்றாண்டுகளுக்கு 1.80 கோடி ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும். இத்திட்டத்தினால் சுமார் 1,500 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

சட்டப்பேரவை தொடங்கி 3 நிமிடத்திலேயே வெளியேறிய ஆளுநர்.. காரணம் என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்.!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…

18 minutes ago

“அணிக்கு எந்த உதவியும் செய்யல…கில் தமிழக வீரர்னா அப்பவே தூக்கியிருப்பாங்க” – பத்ரிநாத்

சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…

1 hour ago

Live : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்..ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் வரை!

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள…

2 hours ago

ஜல்லிக்கட்டுக்கு ரெடியா வீரர்களே! இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம்!

சென்னை : பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகளும் மாடு பிடி வீரர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது என்று கூறலாம்.…

2 hours ago

அமலாக்கத்துறை சோதனைக்கும் டெல்லி பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! – அமைச்சர் துரைமுருகன்

சென்னை : கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அவரது…

3 hours ago

ஐயோ விஷாலுக்கு என்னாச்சு? மேடையில் நடுங்கியதால் ரசிகர்கள் கவலை!

சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு…

3 hours ago