இபிஎஸ் கூறிய குற்றசாட்டு… உடனடி விளக்கம் கொடுத்த தமிழக அரசு.!

TN Govt - ADMK Chief secretary Edappadi palanisamy

சேலம் :  அதிமுக ஆட்சி காலத்தில் சேலம் தலைவாசலில் கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், திட்டம் திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியீட்டு விளக்கம் அளித்துள்ளார்.

அந்த அறிக்கையில், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஆட்சி காலத்தில்  (அதிமுக) இருந்த போது சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோட்டின் தொடங்கப்பட்ட கால்நடை பூங்கா பற்றிய விவரங்களை தற்போது தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டு,

சேலம் தலைவாசல் பகுதியில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் அமைக்க 564.44 கோடி முதலீட்டில் 2019ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.

அதன்படி குறிப்பிட்ட இடத்தில் 9 வளாகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, 2019ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், 2021 திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது, 50 சதவீத பணிகள் கூட அப்போது முடியாத நிலையில் இருந்தது.

உலக தரத்தில் ஆராய்ச்சி நிலையம் அமைக்குமிடம், அதற்கேற்ற இடம்தானா என்பது குறித்து முதலில் ஆராய்ந்திருக்க வேண்டும் சரியான திட்டமிடல் இருந்திருந்தால் இவ்வளவு காலம் காலதாமாவது தவிர்க்கப்பட்டு இருக்கும்.

பின்னர் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கால்நடைத்துறை வளர்ச்சி பற்றி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கண்ட திட்டத்தின் வழிநடத்தும் தலைவராக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராகியம் என்னையும், துணைத்தலைவராக அரசு தலைமைச் செயலாளரையும் இத்திட்ட கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்தார்.

2021 கொரோனா பாதிப்பு, 2023 டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் காரணமாக 2024இல் இத்திட்டத்தை முடிக்க முடியாத சூழல் உருவாகிவிட்டது. தற்போது இத்திட்டத்தை விரைவாக முடிக்க முதலமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன் காரணமாக இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு சேலம், தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அந்த விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MS Dhoni OUT
Chennai Super Kings vs Kolkata Knight Riders
mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk