கட்டட விபத்து – உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சென்னையில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு.
சென்னை பாரிமுனையில் கட்டடம் இடிந்த விழுந்த விவகாரத்தில் உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக செயல்படுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கட்டட உரிமையாளர் பரத்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து எஸ்பிளனேடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை பாரிமுனையில் அர்மேனியன் தெருவில் இன்று 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டது. பழைய கட்டடத்தை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொண்ட போது. இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த, தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் உதவியை சென்னை மாநகராட்சி கோரிய நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.