அரசியலமைப்பு தினம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!
நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அரசியலமைப்பு தினத்தில் உறுதிகொள்வோம் என முதல்வர் ட்வீட்.
இன்று அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களைக் கொண்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து, அதனை வடித்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அரசியலமைப்பு தினத்தில் உறுதிகொள்வோம்!’ என பதிவிட்டுள்ளார்.
சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களைக் கொண்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து, அதனை வடித்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல #ConstitutionDay-வில் உறுதிகொள்வோம்!
— M.K.Stalin (@mkstalin) November 26, 2022