தொகுதி பங்கீடு! 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்… விசிக தலைவர் பேட்டி!

thol thirumavalavan

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக – திமுக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

ஏற்கனவே, தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டது. திமுக பொருளாளர் டிஆர் பாலு தலைமையிலான குழுவுடன் விசிக தலைவர் தொல் திருமாவளவன்  பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் 6 தொகுதிகளை கொண்ட விருப்ப பட்டியலை திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் விசிக அளித்துள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, சிதம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதிகளை திமுகவிடம் விருப்ப பட்டியலாக அளித்ததாக கூறப்பட்டது.

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநர் விளக்கம்..!

இந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், கொள்கை சார்ந்து இயங்கும் திமுக கூட்டணி, இந்தியா வரை விரிவடைந்து இந்தியா கூட்டணியாக உருவெடுத்துள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் கண்டனத்துக்குரியது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம். 3 தனி தொகுதிகளுடன், ஒரு பொது தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டது. 4 தனி தொகுதிகள் கொடுத்து அதில் 3 தொகுதிகளை கேட்டுள்ளோம். அதாவது, சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளில் மூன்று தொகுதிகளையும், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பொது தொகுதிகளில் ஒரு தொகுதியும் ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்