கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காவலர் நவராஜ் சஸ்பெண்ட்…!
நெல்லை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாளையங்கோட்டை காவலர் நவராஜ் சஸ்பெண்ட்
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கள்ள சாராயம் அருந்தி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தரப்பிலும் தமிழக காவல்துறை தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில், கஞ்சா விற்பனை செய்வோர், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாளையங்கோட்டை காவலர் நவராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நவராஜை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.