காவலர் தேர்விலும் முறைகேடு..?குவியும் புகார்கள்..வெளிவரும் குட்டுகள்
- இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு? என்று புகார் எழுந்துள்ளது
- 8,826 இடங்களுக்கு தேர்வு நடந்த நிலையில் அதிலும் முறைகேடு என்று குமுறல்
TNPSC குரூப்4 தேர்வில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி ஆனது தொடர்பான முறைகேடு புகார் எழுந்தது பின் விசாரணை முடிக்கிவிட்ட நிலையில் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.மேலும் அவர்கள் அனைத்தனை பேரும் இனி எந்த அரசு தேர்விலும் பங்கேற்கவும் முடியாது என்று வாழ்நாள் தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த முறைகேடு புகாரே மக்கள் மத்தியில் TNPSC மீது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடந்து இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு? என்ற புகார் அடுத்த அதிர்ச்சியை தந்துள்ளது.கடந்த ஆகஸ்டில் நடந்த தேர்வில் வேலூர் மாவட்டத்தில் ஒரே தேர்வு மையத்தில் இருந்தவர்கள் தேர்வானதாக புகார் எழுந்துள்ளது.
இந்த தேர்வானது இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டர் ஃபையர்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கான 8,826 இடங்களுக்கு தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.