சேலம் அம்மாபேட்டியை சேர்ந்தவர் லியாகத் அலி இவர் ஐஎஸ்எஸ் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பில் இருப்பதாகவும் , கேரள மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் சிலரை மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்புகளில் சேர்த்து வருவதாக மத்திய தேசிய புலனாய்வு என்று அறியப்படும் NIA க்கு தகவல் கிடைத்தது.
கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லியாகத் அலி வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது இதில் பல ரகசியங்கள் சிக்கியது.இந்நிலையில் லியாகத் கேரளாவில் கைது செய்யப்பட்டார். இவரை கேரளாவில் வைத்தே NIA போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.அந்த விசாரணையில் லியாகத் அலிக்கு சேலத்தை சேர்ந்தவர்களான இப்ராகிம்,அப்துல்ரகுமான்,அன்பரசன் ஆகிய மூவரின் மூலமாக போலி முகவரி கொடுத்து சிம்கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.
இதில் ஒருவராக அப்துல்ரகுமான் வைத்துள்ள செல்போன் கடையில் 9 பேரின் போலி ஆவணங்கள் மூலமாக சிம்கார்டுகளை வாங்கி அதை கேரளாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு வழங்கியதாக தெரிகிறது.
போலி ஆவணங்கள் மூலம் ரெடியாகிய சிம்கார்டுகளை அப்துல்ரகுமானிடம் இருந்து திருவிதாங்கோடுஅருகில் உள்ள அடைப்பு விளை பாதர் தெருவைசேர்ந்தவரன அப்துல்சலீம்,மற்றும் இளங்குடியை சேர்ந்த சையது நவாஸ்,கடலூரைச் சேர்ந்த காஜாமைதீன் ஆகிய மூவரும் சேலம் வந்து இந்த சிம்கார்டுகளை எல்லாம் வாங்கிக்கொண்டு கேரளாவில் உள்ள லியாகத் அலியிடம் கொடுத்துள்ளனர்.லியாகத் அந்த சிம்கார்டுகளை தீவிரவாதிகளுக்கு கொடுத்துள்ளார்.
சிம்கார்டுகளை சப்ளே செய்ய வந்த அப்துல்சலீம்,சையது நவாஸ்,காஜாமைதீன் ஆகிய மூவரும் சேலத்தில் பதுங்கி இருப்பதாகவும் பயங்கிரவாதிகள் நாகர்கோவில் வழியாக தமிழகத்தில் ஊடுருவி இந்து தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனால் போலீசார் உசார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பிலும் தொடர் தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது.மேலும் வாகன சோதனையும் தீவிரமாக நடந்து வருகிறது.
காவல்துறை வட்டாரங்கள் இவர்களை பற்றி தெரியவந்தால் 1512 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.சந்தேகப்படும் நபர்கள் என தெரியவந்தாலும் கட்டணமில்லா இந்த எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்று மக்களுக்கு தெரிவித்து வருகிறது.சேலத்தில் தீவிரவாதிகள் பதுங்கல் என்ற தகவலால் அம்மாவட்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…