தேசிய எழுச்சியை முடக்குவதற்காக தொடரப்பட்ட சதி வழக்கு தவிடுபொடியானது – ஹெச் .ராஜா
தேசியத் தலைவர்களையும் தேசிய எழுச்சியையும் முடக்குவதற்காக தொடரப்பட்ட சதி வழக்கு இன்று தவிடுபொடியானது என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், பாபர் மசூதி இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல எனவும், அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐ-யால் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ வழங்கிய ஒளி மற்றும் ஒலி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பை தடுக்க முயன்றனர். எனவே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் கட்சியால் புனையப்பட்டு அத்வானி ஜி உள்ளிட்ட தேசியத் தலைவர்களையும் தேசிய எழுச்சியையும் முடக்குவதற்காக தொடரப்பட்ட சதி வழக்கு இன்று தவிடுபொடியானது. ஆகவே இந்த புனையப்பட்ட வழக்கில் அனைவரும் விடுவிக்கபட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியால் புனையப்பட்டு அத்வானி ஜி உள்ளிட்ட தேசியத் தலைவர்களையும் தேசிய எழுச்சியையும் முடக்குவதற்காக தொடரப்பட்ட சதி வழக்கு இன்று தவிடுபொடியானது. ஆகவே இந்த புனையப்பட்ட வழக்கில் அனைவரும் விடுவிக்கபட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. https://t.co/kqDwWTP3eb
— H Raja (@HRajaBJP) September 30, 2020