அனைத்து துறை பள்ளிகள் ஒருங்கிணைப்பு – மே 2ஆம் தேதி ஆலோசனை!
பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வருவது குறித்து ஆலோசனை.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஒருங்கிணைக்க சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மே 2ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளை இணைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், மொத்த பள்ளிகள், படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, மொத்த பணியிடங்கள் உள்ளிட்ட விவரத்தை பட்டியலிட்டு தர உத்தரவிடப்பட்டுள்ளது.