காலையில் இந்த பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்… கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா..?

காலையில் எழுந்தவுடன் ஆப்பிள் மற்றும் திராட்சை மாதுளை பழம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் கிடைக்கும்.
ஆப்பிள்:
காலையில் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது ஆப்பிளில் வைட்டமின் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து புரதச்சத்து இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது , மேலும் பாஸ்பரஸ் பொட்டாசியம் சத்துக்களும் அதிக அளவில் இருக்கிறது .
இந்த பழத்தை உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும், மேலும் இதய நோய் இருப்பவர்கள் தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இதய நோய் குணமாகும் என்று கூறப்படுகிறது.
சிலபேருக்கு தூரத்தில் இருந்து ஏதெனும் ஒரு பொருள் பார்க்கும் பொழுது சரியாக கண் தெரியாமல் இருக்கலாம் அப்படி உள்ளவர்கள் தொடர்ந்து ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக இருக்கும் வயதான பிறகு வரும் கண் பிரச்னை நோய்களும் குணமாக்கும் என்று கூறலாம்.
தினமும் ஒரு ஆப்பிள் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமையாகும், மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி மேலும் ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் புற்று நோய் வராமல் தடுக்கப்படுகிறது, ஆஸ்துமா இருப்பவர்கள் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ஆஸ்துமா கட்டுக்குள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதுளை:
மாதுளை பழத்தில் ஊட்டச்சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பைட்டோ கெமிக்கல்கள் இது அனைத்தும் அதிக அளவில் இருக்கிறது பலருக்கும் பழம் என்றால் மிகவும் பிடிக்கும் ஆனால் இது உரிப்பது மட்டுமே கடினம் மேலும் அந்தப் படத்தை சாப்பிட்டீர்கள் என்றால் உடலில் அதிக சத்துக்கள் கிடைக்கிறது.
மாதுளம்பழச்சாறு குடித்தால் தலையில் முடிகள் இல்லாதவர்களுக்கு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தி நன்றாக வளர வைக்கும், தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.
மேலும் நமது உடலில் நைட்ரிக் ஆக்சைட் என்ற தனிமம் குறையும்போது, நமக்கு மனஅழுத்தம் ஏற்படும். இந்த நிலையில் மேலும் மாதுளை பழம் சாப்பிடுவதால் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும்.
மாதுளை பழத்தின் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கி நம் உடலை பள பளவென்று ஆக்கிவிடும், மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதாலும், அதன் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை, காயங்களின் மீது தடவுவதாலும் காயம் விரைவில் குணமாகும். அத்துடன் தழும்புகளும் மறையும்.
திராட்சை:
குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் என்றே கூறலாம், இதில் வைட்டமின் B1 வைட்டமின் B2 மற்றும் வைட்டமின் B3 அதிகளவில் உள்ளது. மேலும் வைட்டமின் C இரும்புசத்தும் பாஸ்பரஸ் சத்தும் அதிகமாகவுள்ளது. இந்த நிலையில் திராட்சை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
உடல் வறட்சி பித்தம் இருப்பவர்கள் திராட்சை பழம் அதிகமாக சாப்பிடலாம், இந்த திராட்சை பழத்தை அதிகம் சாப்பிடுவதால் உடல் வறட்சி நீங்கி பித்தம் பிரச்னையை போக்கும் மேலும் ரத்தம் சுத்தமாகி செரிமானக் கோளாறுகளை அகற்றும்.
இதயம் பலவீனமானவர்கள் இந்த திராட்சை பழத்தை பண்ணிரீல் ஊறவைத்து சூடான நீரில் திராட்சை பழத்தை பிசைந்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமையாகும். மேலும் படபடப்பு இருப்பவர்கள் சாப்பிட்டால் மிகவும் நன்மை.
இந்த திராட்சை பழத்தை மிளகில் அரைத்து குடித்தால் கல் அடைப்பு நீங்கும் மேலும் இதை இரண்டு வேலை அருந்தி வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் குறையும், மேலும் குழந்தைகள் சாப்பிட்டால் குடல் புன் குணமாகும். உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
குழந்தைகளுக்கு தொடந்து இந்த திராட்சை பழத்தை கொடுத்து வந்தால் நன்றாக தூக்கமின்மை பிரச்சனை தீரும், பெண்களுக்கு ஏற்படும் மாதவவிடாய் பிரச்சனையும் நீங்கும் என்றே கூறலாம்
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025