காந்தி குடும்பம் இல்லாத காங்கிரஸ் என்பது கனவுதான் – ஜோதிமணி எம்.பி
உத்திரபிரதேசம் , பஞ்சாப் , கோவா , உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. அதிலும், குறிப்பாக ஆளும் மாநிலமாக இருந்த பஞ்சாபிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.இதனால், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பா. சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கட்சியின் தோல்விக்கான காரணங்கள், எதிர்கால திட்டங்கள், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், நிர்வாக ரீதியிலான உட்கட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. காங்கிரஸின் இந்த கூட்டம் சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் தோல்விக்கு தாங்கள்தான் காரணம் என காரிய கமிட்டி கருதினால் கட்சியின் நலனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என சோனியா காந்தி தெரிவித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காந்தி குடும்பத்தை அரசியலில் இருந்து அகற்றுவதுதான் பாஜகவின் திட்டம். அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் சமரசமற்று,அச்சமில்லாமல் மக்கள் நலனுக்காக ஆர்எஸ்எஸ் பாஜகவை உறுதியோடு இறுதிவரை எதிர்த்து நிற்கும் என்பது அவர்கள் அறிவார்கள். அதை வலியுறுத்துபவர்கள் பாஜக திட்டத்திற்கு துணைபோகிறவர்களே.
இந்த தேசத்திற்கான அந்தக் குடும்பத்தின் அர்ப்பணிப்பையும்,தியாகத்தையும் காங்கிரஸ் தொண்டர்கள் உணர்ந்துள்ளோம். காங்கிரஸ் கட்சியை யார் வழிநடத்த வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். அது எங்களின் உரிமையும் கூட. காந்தி குடும்பம் இல்லாத காங்கிரஸ் என்பது கனவுதான். இதை வரலாறு உணர்த்தும்.’ என பதிவிட்டுள்ளார்.
இந்த தேசத்திற்கான அந்தக் குடும்பத்தின் அர்ப்பணிப்பையும்,தியாகத்தையும் காங்கிரஸ் தொண்டர்கள் உணர்ந்துள்ளோம். காங்கிரஸ் கட்சியை யார் வழிநடத்த வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். அது எங்களின் உரிமையும் கூட. காந்தி குடும்பம் இல்லாத காங்கிரஸ் என்பது கனவுதான். இதை வரலாறு உணர்த்தும்.
— Jothimani (@jothims) March 15, 2022