குஷ்புவை காங்கிரஸ் தொண்டர்கள் நடிகையாகத்தான் பார்த்தார்கள் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சமீப காலமாகவே காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.மேலும் பாஜகவில் இணையவே டெல்லி சென்றுள்ளார் என்று தகவல் பரவிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை காங்கிரஸ் நீக்கம் செய்வதாக அறிவித்தது.
எனவே இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் குஷ்பு காங்கிரசில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார் .அவரது கடிதத்தில் , கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பிய என்னை போன்றவர்களை சிலர் ஒதுக்குவதாகவும்,மூத்த தலைவர்கள் புறக்கணிக்கின்றனர் என்றும் மக்களால் அங்கீகரிக்கப்படாத தலைவர்கள் என்னை அடக்கி வைத்தனர்.உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும். நீண்ட யோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்தேன் என்று குஷ்பு கடிதத்தில் தெரிவித்தார்.காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதகாக அக்கடிதத்தில் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், காங்கிரஸில் இருந்து குஷ்பு விலகியதால் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை .குஷ்புவை காங்கிரஸ் தொண்டர்கள் நடிகையாகத்தான் பார்த்தார்களே தவிர, தலைவராக பார்க்கவில்லை. காங்கிரஸில் அவர் தாமரை இலை மேல் தண்ணீர் போலதான் இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…