மக்களவை தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்..! திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து

Congress: மக்களவை தேர்தலில் திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Read More – எய்ம்ஸ் போல் சின்னப்பிள்ளைக்கு வீடும் வரவில்லை: மத்திய அரசின் மீது அமைச்சர் உதயநிதி விமர்சனம்

ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொமதேக, ஐயுஎம்எல், மநீம உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்தது. இந்த நிலையில் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இன்று தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.

முன்னதாக இன்று திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் சத்யமூர்த்தி பவனில் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read More – கமலின் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது … வானதி சீனிவாசன் விமர்சனம்!

தொடர்ந்து அவர்கள் திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை சந்தித்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More – திமுகவுக்கு ஆதரவு.. மக்களவையில் நான் போட்டியிடவில்லை.! – கமல்ஹாசன் அறிவிப்பு.!

அதன்படி தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் இரு கட்சிகள் இடையே கையெழுத்தானது, ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் கையெழுத்திட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்