உண்மையான ஜல்லிகட்டு நாயகன், கதாநாயகன் பிரதமர் மோடி தான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாய கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவை முன்னேற்றியவர் பிரதமர் மோடி. மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கான நிதியை தாராளமாக வழங்கி வருகிறது. சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என கூறியுள்ளார்.
இந்தியாவை இருளுக்குள் தள்ளிய கட்சி காங்கிரஸ். 16 ஆண்டுகாலத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி இந்தியாவுக்கோ, தமிழகத்துக்கோ எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருந்தது காங்கிரஸ் தான். அந்த தடையை உடைத்தெறிந்த பெருமை மோடியையே சாரும். உண்மையான ஜல்லிகட்டு நாயகன், கதாநாயகன் பிரதமர் மோடி தான் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் ஒரே ஒரு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கிடைப்பதே கடினமாக இருந்தது. திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி 2 ஏக்கர் நிலம் தரப்படவில்லை. நாடு போற்றுகிற நல்ல கூட்டணியை அதிமுக – பாமக – பாஜக – தமாகா உருவாக்கியுள்ளது. 2023-ம் ஆண்டுக்குள் மத்திய அரசின் உதவியுடன் கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவோம் என்று கூறி தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை முன்வைத்து தாராபுரம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…