“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்!”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, இன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. நீட் தேர்வு அச்சம் காரணமாக மாளவர்கள் பலரும் தற்கொலை செய்து வரும் நிலையில், நீட் தேர்வுகளை ரத்து செய்ய பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.
மேலும், நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலம், மூலக்குளம் பகுதியில் நீட் தேர்வு நடைபெற்ற தனியார் கல்லூரியை அம்மாநில முதல்வர் நாராயணசாமி ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர், நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும் செவிசாய்க்கவில்லை என குற்றம் சாட்டிய அவர், காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நிச்சியமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.