விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் – ஜோதிமணி எம்.பி
விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். 3வது நாளான இன்று நடைபயணத்தை இன்று காலை 7 மணிக்கு தொடங்கினார். சுங்கான்கடை அருகே சென்றபோது தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ராகுல்காந்தியை சந்தித்தனர். அவர்களுடன் சாலையோர கடையில் அமந்து டீ குடித்தவாறே கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய ஒற்றுமை பயணத்தின் மூன்றாவது நாளில் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தமிழக விவசாயிகளை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகளின் பங்கு முக்கியமானது. விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும்.’ என பதிவிட்டுள்ளார்.
இந்திய ஒற்றுமை பயணத்தின் மூன்றாவது நாளில் தலைவர் @RahulGandhi அவர்கள் தமிழக விவசாயிகளை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகளின் பங்கு முக்கியமானது. விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும்.#BharatJodaYatra. pic.twitter.com/wJWaSwOVXn
— Jothimani (@jothims) September 9, 2022