காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி ! கைப்பற்றியது அதிமுக
நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 33,464 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 33,464 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.தற்போது அதற்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி தொகுதியை கைப்பற்றியது அதிமுக.