திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி… காங்கிரஸ் தேசிய தலைவர்கள் சென்னை வருகை.!
DMK – Congress – மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையின் கீழ் தனித்தனி கூட்டணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வரையில் திமுக கூட்டணி மட்டுமே உறுதியாக தங்கள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு விவரங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது.
Read More – எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் 5 உத்திரவாதங்கள் இதுதான்.! ப.சிதம்பரம் விளக்கம்.!
முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் நேற்று விசிக மற்றும் மதிமுக கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டன. திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை பெரும் காங்கிரஸ் கட்சி தற்போது வரையில் கூட்டணி இறுதி செய்யாமல் இருந்து வருகிறது.
Read More – இதுதான் தவெகவின் நிலைப்பாடு… தனது கட்சியின் உறுதிமொழியை அறிவித்தார் தலைவர் விஜய்!
காங்கிரஸ் தரப்பில் இருந்துதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 தொகுதிகளை கேட்டதாவும், திமுக தரப்பில் கமல்ஹாசனின் மநீம கட்சிக்கு ஒரு தொகுதி அளிக்க முன் வந்து இருப்பதால், காங்கிரசுக்கு 8 தொகுதி கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிந்தது. இதற்கு காங்கிரஸ் தரப்பு ஒப்புக்கொள்ளாத காரணத்தால், இன்னும் இழுபறி நீண்டு கொண்டு இருக்கிறது.
இதனை இன்று இறுதி செய்ய, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கூட்டணி தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த முகுல் வாஸ்னிக், அஜோய் குமார் ஆகியோர் சென்னை வரவுள்ளனர். இன்று மாலை திமுக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இன்று தொகுதி பங்கீடை இறுதி செய்ய உள்ளனர்.
Read More – திமுகவிடம் நாங்க 4 கேட்டோம்.. 2 சீட் கொடுத்துருக்காங்க.! திருமாவளவன் பேட்டி.!
இன்றைய இறுதிக்கட்ட பேச்சுவார்தையில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 தொகுதிகள் தர திமுக தலைமை முன்வந்துள்ளதாகவும், அதனால் காங்கிரஸ் தலைமை ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்கலாம் என முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இறுதியான தகவல்கள் இன்று மாலை வெளியாக உள்ளது.