திமுக தலைவர் ஸ்டாலின் கெஞ்சலாம்.. கொஞ்சலாம்.. மிஞ்சவும் செய்யலாம்.! காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு கருத்து.!

Default Image

ஒரு கட்சி தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உரிமை உண்டு. அவர் நிர்வாகிகளிடம் கெஞ்சவும் செய்யலாம், கொஞ்சவும் செய்யலாம், மிஞ்சவும் செய்யலாம் அது தலைவரின் விருப்பம் என காங்கிரஸ் எம்பி கருத்து தெரிவித்துள்ளார். 

 காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு இன்று தனது பாராளுமன்ற தொகுதியான திருச்சியில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார். அவர் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக இந்த பணிகள் கிடப்பில் இருந்தது . தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பட்டால் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இன்னும் 2,3 மாதங்களில் இந்த மேம்பால பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எம்பி திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அடுத்ததாக, திமுக கட்சி பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது குறித்து கேட்கப்பட்டபோது,   அது கட்சி கூட்டம். ஒரு கட்சி தலைவராக அவருக்கு உரிமை உண்டு. அவர் நிர்வாகிகளிடம் கெஞ்சவும் செய்யலாம், கொஞ்சவும் செய்யலாம், மிஞ்சவும் செய்யலாம் அது தலைவரின் விருப்பம் என தனது கருத்தை கூறினார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து இருந்தாலும் ஜெயிப்போம் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது பற்றி கேட்கையில், ‘ அது அவருடைய தன்னம்பிக்கை. கட்சி தலைவர் தான் கலந்து ஆலோசித்து கூட்டணி குறித்த முடிவு எடுக்க வேண்டும். ஸ்டாலின் அப்படியெல்லாம் செய்ய மாட்டார். எங்கள் கூட்டணி தொடரும் . ‘ என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு கூறினார்.

தமிழக ஆளுநர் மத்திய மாநில அரசுக்கு பாலமாக செயல்பட வேண்டும். அதனை விடுத்து தமிழ் சொல்லிக்குடுக்கவோ, ஹிந்தி, சமஸ்கிருதம் பெருமை பேசுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல எனவும் தனது கருத்தை தெரிவித்தார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்