“இந்திய தேசத்திற்கு பேரிழப்பு” பிரணாப் முகர்ஜி மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் ட்வீட்.!
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் இரங்கல்.
கடந்த சில நாட்களாக முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தனது ட்வீட்டர் பக்கத்தில், பிரணாப் முகர்ஜி மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், இந்திய தேசத்திற்கும் பேரிழப்பாகும் என்று தெரிவித்ததோடு ஒரு அறிக்கையை வெளிட்டுள்ளார்.
இது குறித்து அந்த அறிக்கையில், இந்தியத் திருநாட்டின் முத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல்வேறு துறைகளில் மத்திய அமைச்சராக இருந்து மக்கள் பணியாற்றியவரும், குறிப்பாக சிறந்த நிதி அமைச்சர்கள் ஒருவராகவும், திறமையான ஜனாதிபதிகளில் ஒருவராகவும் அரும் பணியாற்றியவர் திரு பிரணாப் முகர்ஜி அவர்கள், சிறந்த பொருளாதார மேதை, மிகுந்த நினைவாற்றல் நிரம்பியவர் அன்னை இந்திரா காந்தி, தலைவர் ராஜீவ் காந்தி, திரு மன்மோகன் சிங் உட்பட பல பிரதமர்களின் அமைச்சரவையில் திறமையான அமைச்சராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர்.
அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் அவரின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், இந்திய தேசத்திற்கும் பேரிழப்பாகும் அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் சக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், இந்திய தேசத்திற்கும் பேரிழப்பாகும்.@CitiznMukherjee pic.twitter.com/MZC48F4NBJ
— Su.Thirunavukkarasar (@ThiruArasarINC) August 31, 2020