திமுக கூட்டணிக்கு மேலும் 3 கட்சிகள் இணையும்.! காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் நம்பிக்கை.!
திமுக- காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. அடுத்த தேர்தல் நேரத்தில் இந்த கூட்டணியில் இன்னும் இரண்டு மூன்று கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. – காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக என பிரதான கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி தான் அடுத்த தேர்தலிலும் தொடரும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த கூட்டணி குறித்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் தேர்தலை பொருத்தவரை தமிழ்நாட்டில் கட்சி, கூட்டணி பலம் மற்றும் சின்னம் தான் வெல்லும். திமுக- காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. அடுத்த தேர்தல் நேரத்தில் இந்த கூட்டணியில் இன்னும் இரண்டு மூன்று கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார்.
இந்த 21ம் நூற்றாண்டில் வாக்காளர்கள் போஸ்டர்களையும், பேனர்களையும் கவனிப்பதில்லை. தற்போது செயல்பாடு மட்டும்தான் கவனிக்கப்படுகிறது. எனவும் கார்த்தி சிதம்பரம் திமுக கூட்டணி குறித்து தனது கருத்தை கூறினார்.