கரூர் மாவட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மற்றும் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்யபட்டுள்ளது.
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானா பகுதியில் காங்கிரசால் அமைக்கப்பட்ட 70 ஆண்டு பழமையான காந்தி சிலையில் பராமரிப்பு பணி என்ற பெயரில் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அதிகாலை 6 அடி உயர புதிய காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணி சரியில்லை எனவும், இதற்கு உரிய அரசாணை வேண்டும் என்று கூறி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், திமுக நகர நிர்வாகிகள் என பலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்ட வந்த நிலையில், காவல்துறையினர் கட்டுமான பணிகளை தடுக்க கூடாது எனவும் இல்லையென்றால் கைது செய்வோம் என்று கூறியதற்கு, கைதாக மாட்டோம் என்று கூறி நீண்ட நேரம் தர்ணாவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரக்கூடும் என்று கூறி கைதாவதற்கு பெண் காவல்துறையினர் மற்றும் காவலர்கள் இணைந்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கைதாகி உள்ளனர் என தகவல் கூறப்படுகிறது.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…