தமிழகம் வந்தடைந்த ராகுல் காந்தி ! இன்று தேர்தல் பரப்புரை
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்சியான காங்கிரஸ் ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.அதன்படி பொங்கல் தினத்தன்று தமிழகம் வந்த ராகுல் காந்தி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார்.பின்பு கோவை விமான நிலையம் வந்தடைந்தார் ராகுல்காந்தி.நாளை வரை மீண்டும் தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.இதனால் நேற்று கோவை வந்த ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது .அதன்படி நேற்று ,முதல்கட்டமாக கோவை மற்றும் திருப்பூரில் தனது பரப்புரையை ராகுல் காந்தி தொடங்கினார்.
இந்நிலையில் இன்று ராகுல் காந்தி திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.