ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை ! 3 நாட்களில் 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வருகின்ற இன்று முதல் 25-ஆம் தேதி வரை மீண்டும் தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக ,திமுக ,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி உள்ளன.அந்த வகையில் தேசிய கட்சியான காங்கிரஸ் ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.அதன்படி பொங்கல் தினத்தன்று தமிழகம் வந்த ராகுல் காந்தி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார்.
இந்நிலையில் ராகுல் காந்தி இன்று முதல் 25-ஆம் தேதி வரை மீண்டும் தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி ஈடுபடுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025