கூட்டணி வேறு.! கொள்கை வேறு.! திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.! காங்கிரஸ் தலைவர் பேட்டி,!
திமுக – காங்கிரஸ் கூட்டணி வேறு, கொள்கை வேறு. திமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களால் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்த்தில் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையை அடுத்து, நளினி உள்ளிட்ட 6 பேர் சனிக்கிழமை விடுதலை ஆகினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துக்களை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சென்னை கிண்டியில் சந்தித்து குறிப்பிட்டார்.
அதில், ‘ ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை வெளியே நடமாட விடுவது தவறு. 25 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? வழக்குப் பதிவு கூட செய்யாமல் விசாரணைக்காக சென்ற பலர் சிறையில் இருக்கிறார்கள். சந்தேகத்தின்பேரில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யாதது ஏன்?’ என தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
அடுத்து திமுக கூட்டணி குறித்தும் அழகிரி பேசினார். அது குறித்து குறிப்பிடுகையில், ‘ திமுகவுக்கும் எங்களுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடு உண்டு. ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை என்பது தவறு. திமுக – காங்கிரஸ் கூட்டணி வேறு, கொள்கை வேறு. திமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களால் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. எங்களுக்கும் திமுகவுக்கும் ஏராளமான முரண்பாடுகள் இருக்கிறது என்றாலும், மதசார்பற்ற கூட்டணி என்ற அடிப்படையில் நாங்கள் இணைந்துள்ளோம். ‘ என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.