45,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை..!
சுமார் 45,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
8 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 9-வது சுற்று எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
சுமார் 45,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 24985 வாக்குகளை பெற்று பின்னடைவில் உள்ளார்.