ராகுல்காந்திக்கு சிறை தண்டனை.! தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சாலை மறியல்.! ரயில் மறியல்.!
ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் காங்கிரசார் சாலை மறியலிலும், ரயில் மறியலிலும் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதே போல அவருக்கு ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாலை மறியல் :
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை குற்றவாளி என அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை உட்பட பலர் தமிழக சட்டப்பேரவைக்கு வெளியே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ரயில் மறியல் :
அதே போல, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
கோஷங்கள் :
அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், ராகுல்காந்திக்கு மத்திய அரசு தொடர்ந்து நெருக்கடிகளை வழங்கி வருகிறது ஈனவும் கோஷங்கள் எழுப்பி போராடி வந்தனர்.